அடையார் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.செங்கல்பட்டு மற்றும் சென்னை தெற்கு இடங்களை சேர்ந்த மாணவர்கள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ஹு ஆர்ச்சரி மிஷினை’ சேர்ந்த பயிற்சியாளர் வெங்கடேசனிடம் குரோம்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி பணியாளர்கள் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பராமரிக்கப்படும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றவர்கள். குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி பணியாளர்கள் குடியிருப்போர் நல சங்க செயலாளர் சௌமிய நாராயணன் மற்றும் உறுப்பினர் ராஜு பரிசுப்பெற்றோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் விழிப்புணர்வு மையத்தின் சார்பில்
குரோம்பேட்டையில் மக்கள் விழிப்புணர்வு மையத்தின் சார்பில் பல்லவபுரம் நகராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து கட்சிகளிடம் வேண்டுகோள் வைத்து துண்டுப்பிரசுரம் மக்களிடம் வினியோகிக்கப்பட்டது! 10 சமூக ஆர்வலர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்திலும் கழுத்திலும் கோரிக்கை அட்டையை மாட்டிக்கொண்டு நகராட்சியில் தொடங்கி சிஎல்சி ஒர்க்ஸ் ரோடு, ஜிஎஸ்டி சாலை, ஸ்டேஷன் பார்டர் ரோடு, ராதாநகர் மெயின்ரோடு, ஸ்டேஷன் பார்டர் ரோடு, ஆர்பி ரோடு,அஸ்தினாபுரத்தில் முடிவுற்றது. மையத்தின் தலைவர் வி.சந்தானம் தலைமையேற்று நடத்தினார்.
குரோம்பேட்டையை சேர்ந்த
குரோம்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் லயன் எம்.ஜெயபால் &செல்வகுமாரி மகன் ஜெ.அரவிந்த்க்கும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும், ஏ.மதிவாணன்&வாகீஸ்வரி மகள் எம்.அருணாவுக்கும் திருமணம் கடந்த மாதம் (பிப்ரவரி) 24&ந்தேதி நெல்லை மாவட்டம் சீதபர்நல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அதையொட்டி கடந்த 3&ந்தேதி பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஆரணா மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலடி அருணா பூங்கோதை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், லயன்ஸ் க்ளப் பிரமுகர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியபோது எடுத்தபடம்.
பொங்கல் பரிசாக...
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் நகரம் பம்மல் நகரம் அனகாபுத்தூர் நகரம் திருநீர்மலை பேரூர் பொழிச்சலூர் திரிசூலம் ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசாக சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத்தினருக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தனது சொந்த செலவில் வேஷ்டி சட்டை புடவை இளைஞரணிக்கு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போன்ற பொருட்களை அடங்கிய தொகுப்பு பைக்களை வழங்கினர். இதில் நகரக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணியினர் பரிசுப் பொருட்களை பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் இ.ஜோசப் அண்ணாதுரை கலந்து கொண்டார்.